பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.15
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 


நிமிட இடைவேளை நேரத்தில் அவரால் நடக்கக் கூட முடியவில்லை. மூச்சுத் திணறல் தொடங்கியது. ஆடிய களைப்பு அவரை உயிர்க்காற்றுக்காக அலைமோத வைத்தது.

பிறகு! அரசினர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் களைப்பினால் கண்மூடிக் கிடந்தவர் பிறகு, விழிக்கவே இல்லை. வெற்றிமகளின் அரவணைப்பில் அவர் வீர மரணம் அடைந்தார்.

குமார் ஆனந்தன் என்னும் அந்த வழக்கறிஞர் உலகசாதனை நிகழ்த்தினார். என்றாலும் உலக வாழ்க்கையை இழந்து போனாரே! ஆட்டமும் வாழ்க்கையும் விளையாட்டாக இருக்கலாம். விளையாட்டு எப்பொழுதும் வினையாகிவிடக் கூடாது என்பதில் கவனமாகவே இருக்க வேண்டும்.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சல்லவா!