பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.17
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 


காவலர்களிலே ஒருவன் அரசனின் ஆவலைக் கண்டு, தான் போட்டியிடுவதாக ஏற்றுக் கொண்டான்.

இந்த போட்டிக்காக 500 கிணி நாணயங்கள் தருவதாகக் கூறினான் மகாபீட்டர். இதைத் தொடர்ந்து சீமார்க்யூஸ் கார்மதன் என்று அழைக்கப்படுகின்ற மாளிகைத் தோட்டத்தில் உள்ள ஓரிடத்தில் போட்டி நடத்தப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

லண்டனில் உள்ள முக்கியமான பிரபுக்களும் பல முக்கியஸ்தர்களும் போட்டியைக் காண வரவேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டது. மகாபீட்டரும், அவனது பரிவாரங்களுடனும் மெய்க்காப்பாளர்களுடனும் மிக ஆவலுடன் போட்டியின் முடிவைக் காண அமர்ந்திருந்தான்.

போட்டித் தொடங்கிவிட்டது. இங்கிலாந்து வீரன், தன்னுடன் மோதவா! என்று சவால் விடும் பாணியிலே ரஷ்ய வீரனை சத்தம் போட்டு அழைத்தான். அனுபவப்பட்ட வீரன் அல்லவா! ஆனால் ரஷ்ய வீரனோ தனது தந்திரப் பாணியிலே முன்னுக்கு வராமல், இருந்த இடத்திலே இருந்து, பயந்தவனாக பாவனை செய்து, சமயம் நோக்கிக் காத்திருந்தான்.

முன்னுக்கு வராமல் இருந்ததை, இங்கிலாந்து வீரன் பயந்துவிட்டான் என்ன எதிரி இவன் என்று திமிராக எண்ணிக்கொண்டான்!' தன்னை மிகவும் பலசாலி, மகாவீரன்' என்றும் கருதிக்கொண்டான். ஆகவே, தானே அவன் இருக்குமிடம் ஓடிவந்து தாக்குதலைத் தொடங்கிவிட்டான்.

இந்தக் குத்துச்சண்டை போட்டியிலே கைகளால் முகத்தில் மட்டும்தான் குத்தலாம் என்பதில்லை. தலையால் மார்பிலே மோதலாம். இடிக்கலாம். தள்ளலாம் என்ற விதியும் அந்த நாளில் இருந்துவந்தது. எனவே இங்கிலாந்து வீரன்,