பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
20
 


கவலைகொள்ளவில்லை. தனக்குரிய வாய்ப்பைப் பயன்படுத்தி விளையாடினார். முடிந்தவரை ஆடினார். அப்படியும் அவர் எடுத்த ஓட்டம் 0, 0, 0 ஆட்டம் இழக்கவில்லை, 1, 1 ஆட்டம் இழக்கவில்லை, 0, 0, 0, 0, 1 ஆட்டம் இழக்கவில்லை, (Not out) 0, 0, 0, 0 என்றே ஆடியிருக்கிறார்.

11 முறை விளையாடும்போது 0 ஓட்டம், மூன்று ஆட்டத்தில் 3 ஓட்டம். அதற்காக அவர் கலங்கினாரா! இல்லை. விளையாட்டை விளையாட்டுக்காக விளையாடினார். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார்.

தோல்வியில் அவர் அனுபவத்தைக் கண்டார். தைரியத்தைக் கொண்டார். பின்னால் அவர்பெரும் புகழ்பெற அந்த மனோதைரியமே காரணமாக அமைந்தது

நமக்கெல்லாம் தைரிய நெஞ்சமும் மனச்சாந்தியும் தந்திட முன்மாதிரியாக அமைந்த அந்த மாவீரனின் பெயர் ஜி.டெய்ஸ் என்பதாகும். இங்கிலாந்தில் உள்ள யார்க்‌ஷயர் எனும் மாநிலத்தவர். அவர் ஆடிய காலம் 1907 ஆம் ஆண்டு ஆகும்.