பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

7. இப்பொழுது எப்படி!

'என் பாட்டன் கலெக்டர், நான்தான் வேலையில்லாமல் தெருவில் நிற்கிறேன்' என்று எவனாவது ஒருவன் கூறினால், அவனை யார் மதிப்பார்? பழம் பெருமை பேசுவதில் புண்ணியமில்லை. இன்று நீ என்ன செய்கிறாய்? எப்படி இருக்கிறாய்? எவ்வாறு செயல்படுகிறாய்? எந்த நிலையில் உன்திறமை இருக்கிறது என்பதை வைத்துத்தான், உன் பெருமை கணக்கிடப்படுகிறது. 'உன் இடமும் நிர்ணயிக்கப் படுகிறது' என்பதை எல்லோரும் உணரும் காலம் வந்துவிட்டது.

சொல்லுக்கும் செயலுக்கும் பல சமயங்களில் சம்பந்தம் இருப்பதில்லை என்பார்கள். ஆனால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைப்பெற்ற (1980) கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஒரு சுவையான சர்ச்சை எழுந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சிறந்த பிரபல ஆட்டக்காரர், உலகப் புகழ் பெற்றவராக விளங்கியவர் முஷ்டாக் முகமது என்பவர், தனது 13 வயதிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றவர். சிறந்த சாதனைகளையும் ஏற்படுத்தியவர். 1979-ம் ஆண்டு இந்தியாவில் போட்டியிட வந்த போட்டிக்குரிய பாகிஸ்தான் குழுவில், அவர் இடம் பெறவில்லை, அதுபற்றி முஸ்டாக் முகமதுவே வியப்புத் தெரிவித்திருந்தார். தான் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதுதான் அவருக்குரிய வியப்பும் வினாவும்.

ஆனால், பாகிஸ்தான் அணியைத் தேர்ந்தெடுத்தது பற்றி காணல் ரபிக் என்பவர் அதுபற்றி விளக்கம் தெரிவித்தார். 'முஸ்டாக் முகமதுவின் சேவையில் பாகிஸ்தான் அதிகமாகப் புகழ் பெற்றது உண்மைதான். அவரும் சிறந்த