பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
24
 


ஆட்டக்காரர்தான்.ஆனால் கடந்த ஒன்னரை ஆண்டு காலமாக அவரது ஆட்டம் முன்போல் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அவ்வாறு அவர் நன்றாக ஆடாததால்தான், இந்தத் தேர்வில் அவர் தேறவில்லை. அணியில் இடம் பெறவில்லை."

'நீ ஆளைச் சொல்லு நான் 'ரூலை'ச் சொல்கிறேன்' என்கிற இந்தக் காலத்தில் இப்படி ஒரு பதில். செயல்.

ஒருவர் எப்படி இருந்தார் என்று பழையதையே நினைத்து பெருமைப்பட்டு, வாய்ப்பளிக்கும் நம்மவர்கள் இதை ஒரு பாடமாகக் கொள்ளவேண்டும். ஒருவர் எப்படி இருந்தார் என்பதை மறந்துவிட்டு, இப்பொழுது எப்படி இருக்கிறார் என்பதை உணர்ந்து ஆட்டக்காரர்களை நாமும் தேர்ந்தெடுத்தால், இந்தியாவும் பல ஆட்டங்களில் உலக வெற்றி நாடாக வரலாம்! வருங்காலம் வளமாகலாம் என்று நாமும் எதிர்பார்ப்போம்.