பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
26
 

உலகிலேயே சிறந்த வீரன் என்ற பட்டத்தை வாங்கித்தந்ததுடன், கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்வும் உதவி செய்தது. இன்று முகமது அலி என்ற வீரனுக்கு இணையாகக் கூறிட யாருமே இல்லை என்று பெரும் சாதனையையும் சாதித்து விட்டான்.

ஆகவே, இந்த சூழ்நிலையை உண்டு பண்ணிய பெயர் தெரியாத திருடனை நாம் வாழ்த்தலாமா? வீரனின் பிரியமான சைக்கிளையும் நாம்நினைவு கூர்வோமே!

சந்தர்ப்பங்களே மனிதனை உருவாக்குகின்றன. அதற்கு சான்றாகத் திகழ்கின்ற வீரர்களுள் முகமது அலியும் ஒருவர் என்றால் ஆச்சரியமே இல்லை.