பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
31
டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா
 
11. இந்தியாவிலும் இல்லாமல் இல்லை!


யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் இந்த நெடுந்தூரப் போட்டியில் என்ற அறிவிப்பு வெளியானது.ஓடிமுடிக்கக்கூடிய தூரத்தின் அளவை பார்த்ததும், பார்த்த வேகத்தில் பின்புறமாகவே ஓடிப்போனவர்கள் அநேகம். நம்மால் முடியுமா என்று முன்வந்து முயல்வேகத்தில் ஓடி மறைந்தவர்களும் அநேகம்.

அப்படி அயரவைக்கும் அந்த ஓட்டப் போட்டியின் தூரம் என்ன? 160 கிலோ மீட்டர் தூரம்தான். ஒலிம்பிக் பந்தயத்தில் மாரதான் ஓட்டப் போட்டிக்குரிய தூரமே 40 கிலோ மீட்டர்தான். அதைவிடநான்கு மடங்குதூரம் அதிகம் என்றால் நடக்கக்கூடிய காரியமா இது!

என்றாலும், போட்டி நடைபெறாமல் போகவில்லை. பயிற்சி உள்ளவர்கள், பலம் நிறைந்தவர்கள், பயமில்லாமல் ஒருகை பார்க்கலாம், என்று வந்தவர்களுடன் தொடங்கி, 24 மணிநேரம் கழித்து முடிவெல்லையை வந்தடைந்தார் ஒரு வீரர்.

இவரா முதலாவதாக வந்தார் என்றால் யாரும் நம்பவில்லை, நம்பவும் முடியவில்லை. இனிக்கும் இருபதுக்குள்ளான வயதுக்குரியராகவா அந்தவீரர் இருந்தார்? இல்லையே! முடிந்துபோன முதுமை என்கிறோமோ அந்த வயதுக்காரராகவே விளங்கினார்.

அவர் சமீபத்தில்தான் தனது 67வது பிறந்தநாளை மிகவும் விமரிசையாகக் கொண்டாடி முடித்தாராம்! அந்த 67 வயது இளைஞர் இதற்குமுன் ஓடிஎங்கேனும் பரிசுபெற்றிருக்கிறார். வெளிநாட்டுப் பயணம் போயிருக்கிறாரா என்று கேட்டால்,