பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

36


13. லட்சியம் தோற்பதில்லை!

இங்கிலாந்து நாட்டிலே ஒரு கிரிக்கெட் ஆட்டக் காரர். வேகமும் விறுவிறுப்பும், மதியூகமும் மட்டற்ற ஆர்வமும் நிறைந்த ஆட்டக்காரர். ட.செஸ்டர் (Chester) என்பது அவர் பெயர்.

சிறப்பாக அவர் ஆடிக்கொண்டுவந்த திறமையைக் கண்டு, அவரது மாநிலத்தின் பிரதிநிதியாக ஆடுகின்ற வாய்ப்பினைப் பெற்றார். 1912ம் ஆண்டு அது. ஒர்செஸ்டர்ஷயர் எனும் குழுவில் ஒரு ஆட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரபலமாக விளையாடிக் கொண்டிருந்தார் செஸ்டர்.

இந்த மாநில அளவு பிரதிநிதியாக விளையாடும் ஆட்டத்தோடு அவரது ஆசையும் லட்சியமும் நின்றுவிடவில்லை. இன்னும் அதிகத்திறமையை வளர்த்துக் கொண்டு, இங்கிலாந்து நாட்டின் சார்பாக ஆடக்கூடிய வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஓர் இனிய லட்சியத்துடன் விளையாடிவரும் நாட்களிலேதான், எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று அவர் வாழ்க்கையிலே நடைபெற்றது.

இராணுவ வீரராகப் பணியாற்றுகின்ற வாய்ப்பினைப் பெற்றார். அப்பொழுது மத்தியகிழக்குப் பகுதியிலே போர் ஏற்பட்டதால், போர்க்களத்திலே பணியாற்றவும் செஸ்டர் போகவேண்டியிருந்தது. போர்க்களத்திலே போரிடும் பொழுது, செஸ்டரின் லட்சியமே புதையுண்டுபோகும் வகையிலே, மீண்டும் ஒரு பயங்கரசோதனைபோன்ற நிகழ்ச்சி நடந்துவிட்டது.

ஆமாம். செஸ்டரின் வலது கையின் மணிக்கட்டுப் பகுதியை இழக்கவேண்டிய கொடுமையான நிலைமைக்கு