பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை


பல்கலைப் பேரறிஞர், டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகாலமாக விளையாட்டுத் துறை தமிழ் இலக்கியத்திற்காக வாழ்ந்தவர்.

திருமூலர், திருவள்ளுவர், வள்ளலார் போன்றவர்களுக்குப் பிறகு, தேகத்தின் தெய்வாம்சம் பற்றி மக்களிடையே, மகிமையை வளர்க்கும் பணியைக் கடந்த நாற்பது ஆண்டுகளாகச் செய்து வந்தார்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கையில் நம்பிக்கையுடைய இவர், எங்கும் முதல், எதிலும் முதல் என்பதுபோல, பல அரிய காரியங்களை நிறைவேற்றினார்.

சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன்றவை நடத்திய ஓடுகளப் போட்டிகளில் வெற்றி வீரராகத் திகழ்ந்திருக்கிறார்.

தான் பெற்ற வெற்றியும், புகழும் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்காக `விளையாட்டு இலக்கியத் துறை' என்ற புதிய துறையை உருவாக்கினார்.

முதன் முதலாக விளையாட்டுத் துறை இலக்கிய நூலை 1964ம் ஆண்டில் எழுதிமுடித்த இவர், இதுவரை இருநூறு நூல்களைப் படைத்திருக்கிறார்.

இதற்காக, தான் வகித்து வந்த எல்லாப் பதவிகளையும் விட்டு விட்டு, முழுநேர எழுத்தாளராக வாழ்ந்தார்.

முதன் முதலாக 1987-ஆம் ஆண்டு உடற்பயிற்சி செய்வதற்கென்று ``விளையாட்டு இசைப்பாடல்கள்" என்ற ஒலி நாடாவை தயாரித்து வெளியிட்டுள்ளார்.