பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



30

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



14. எதிர் நீச்சல் எப்படித்தான் முடிந்ததோ!

ஆற்றிலோ குளத்திலோ, சற்று அலைவர்ணிப்பவர்கள் பலர் உண்டு.புரண்டு வரும் கடல்ஓத்திலோ ஐந்து அல்லது ஆறடி தூரம் எதிர் நீச்சல் போடுவதற்குள் கைகால்கள் அசந்துபோய் குடைச்சல் எடுத்து விடுகின்றன. ஆற்றோடும் அலையோடும் போவதுகூடக் கொடுமைதான். ஆனால், ஒரு நீச்சல் வீரர் நிகழ்த்தியிருக்கும் சாதனையைப்பார்த்தால், இதுநிஜமாக நிகழ்ந்த சம்பவமா என்று நினைக்கவும் சந்தேகப்படவும் அல்லவா தோன்றுகிறது!

அமெரிக்காவில் உள்ள நதி ஒன்று, அதற்கு மிசிசிபி என்பது பெயர். அந்த ஆற்றிலே நீந்தி சாதனை செய்ய வேண்டும் என்று விழைந்தார் ஒரு வீரர். பெயர் ஜான் V. சிக்மண்ட் என்பதாகும். அமெரிக்கநாட்டு செயின்ட் லூயிஸ் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்.

அந்த ஆற்றிலே குதித்து அவர் நீந்திய தூரம் 292 மைல்களாகும். அதற்காக அவர் எடுத்துக்கொண்ட நேரம் 89 மணி 42 நிமிடங்களாகும். 1940ம் ஆண்டு ஜூலை மாதம் ஜான் சிக்மண்ட் இந்த அற்புதமான அரிய சாதனையை ஏற்படுத்தினார்.

அரைமணிநேரம் தண்ணீரில் இருந்தாலே கண் சிவந்து, காதுகளில் தவர்ணிப்பவர்கள் பலர் உண்டு.ண்ணிர் புகுந்து எரிச்சலோடும் திணறலோடும் வெளியேற வைக்கும் நீச்சலில், 89 மணிநேரம் எப்படித்தான் ஜான்சிக்மண்ட் இருந்தாரோ தெரியவில்லை. அவருக்குள்ள உடல் திண்மையையும் உள்ள வலிமையையும் தான் இது காட்டுகிறது.

சாதனை நிகழ்த்தவேண்டுமானால், உன்னத உழைப்பும் கடுமையான பயிற்சியும், நீங்காத நினைவும், நிலையான மனஉறுதியும் வேண்டும். வாழ்க்கையே ஒரு எதிர்நீச்சல் தானே நீச்சலுக்குள் எதிர் நீச்சல்போட்ட வீரர் நமக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவே விளங்குகிறார்!