பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.47
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 

18. இதுவல்லவோ பெருந்தன்மை!

விளையாட்டுக்களில் பெருந்தன்மையானது மிகவும் முக்கியம். அது வாழ்க்கைக்குவேண்டாமா, விளையாட்டுக்கு மட்டுந்தான் வேண்டுமா, என்றால் விளையாட்டும் வாழ்க்கையும் வேறு வேறு என்று எண்ணினால்தானே! விளையாட்டில் பெறுகின்ற பண்பும் பழக்கமும், வாழ்க்கைக்கும் அப்படியே பயன்தருவதால்தான். விளையாட்டுக்கள் சமுதாயத்திலே முக்கிய இடத்தை வகிக்கின்றன.

பெருந்தன்மை நிறைந்தவர்களையே நாம் பண்பாளர்கள் (Gentlemen)என்கிறோம். பெருந்தன்மையான செயல்களில் ஈடுபடுவதினால், பங்கு பெறுபவர்கள், பார்வையாளர்கள், போட்டிகளை நடத்துகின்றவர்கள் எல்லோருமே மனதிருப்தியும் மகிழ்ச்சியும் அடைகின்றார்கள். அத்தகையவர்களைத் தேர்ந்தெடுத்து, பண்பாளர் பரிசு (Fair Play Award) என்பதாகவும் வழங்குகின்றார்கள்.

அத்தகைய இனிய பரிசுகளை இரண்டு ஆட்டக்காரர்களுக்கு வழங்கி, யுனெஸ்கோ ஸ்தாபனம் கெளரவித்தது. அப்படி அந்த இரண்டு ஆட்டக்காரர்களும் என்னதான் செய்துவிட்டார்கள் என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றதல்லவா!

முதலாவது விளையாட்டு வீரர் போலந்து நாட்டைச் சேர்ந்த விளோடிசிமியர்ஸ் லுபான்ஸ்கி (Wil0dzimierz Lubanski) என்பவர் உலகக் கால்பந்தாட்டப் போட்டியின்போது ஆட்டத்திற்கிடையில் நடந்து கொண்ட விதத்தால் இப்போது பெற்றார்.

உலகக் கால்பந்தாட்டப் போட்டியில் டென்மார்க்கு நாடும் போலந்து நாடும் போட்டியிட்டது. அப்பொழுது