பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.49
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 


அதற்கான தேர்வோட்டப் போட்டியில் (Heat) பங்குபெற வந்தபோது, தன்னைவிட பெல்ஜியம் நாட்டு வீரரான அல்போன்ஸ் பிரிஜென்டென்பக் {Alfons Brijindenbach }என்பவர் சிறந்த போட்டியாளர் என்பதிலே அவர் உறுதியாயிருந்தார்.

அந்தப் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையை நிறைய வைத்திருந்தார். ஆனால் அந்தப் போட்டியின்போது அல்போன்சுக்குக் காலில் காயம் ஏற்பட்டு, வழக்கமாக வேகமாக ஓடமுடியாது என்ற நிலையில் இருப்பதை உணர்ந்த ரிசார்டு, அவர் அந்த ஓட்டத்தில் மூன்றாவதாக வந்தால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதையும் அறிந்து கொண்டார். அதனால் அவர் நான்காவதாக ஓடிவந்து அல்போன்சுக்கு தன்னிடத்தை வழங்கி மனமகிழ்ச்சி கொண்டார்.

போட்டிக்குத் தவறான வழிகளையே பயன்படுத்து பவர்கள் இடையே, நல்ல மனப்போட்டி வேண்டும். அதுவும் பண்பான போட்டி வேண்டும் என்று தனது குழுவில் உள்ள ஒருவர் சிறந்த வெற்றிபெற வாய்ப்பையும் வசதியையும் வழங்கிய ரிசார்டும் பண்பாளர் பரிசு பெற்றார் என்றசேதி, விளையாட்டு உலகில் வழிகாட்டும் அற்புத சம்பவங்கள் அல்லவா?