பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
5O
 

19. தாங்கமுடியாதவருக்கு தண்டனை!

உலகக்கோப்பைக்கான கால்பந்தாட்டப் போட்டியில் ஓர் உச்சக் கட்டம். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருக்க முடியாத நிலையில், உணர்ச்சிப் பெருக்கேறிய சூழ்நிலையில் அமர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இத்தாலிய நாட்டுக் குழுவினர். ஆடுகளப் பக்கத்திலே பந்து விளையாடப்படுகிறது. இதோ! இத்தாலியக் குழுவினரின் இலக்கு ஓரத்தில் பந்து வந்துவிட்டது. அதைத் தள்ளி விடுகிறார் எதிர்க்குழு ஆட்டக்காரர். அதனைத் தடுக்க வந்த இத்தாலிய நாட்டுக் குழுவின் இலக்குக் காவலர் பாய்ந்து விழுந்தார்.

பந்து அவர் கையில் படவில்லை. அதோ! பந்து மெதுவாக இலக்கை நோக்கி உருண்டு சென்று கொண்டிருக்கிறது. அதனைத் தடுக்க வேறு எந்த ஆட்டக்காரரும் வரஇயலாத நிலையில், ஆங்காங்கே ஆட்டக்காரர்கள் இருக்கின்றனர். இன்னும் ஒருசில வினாடிகளில் பந்து இலக்கினுள் சென்றுவிடும். பிறகு, இத்தாலி தோற்றுப் போய்விடும்.

எல்லா ரசிகர்களும் இந்த நிலைமையும், பந்து போகின்ற நிலையையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். மனதிலே பரபரப்பு! தாங்கள் போய்தடுத்து விடலாம் என்றால் முடியுமா! மனதுக்குள்ளே குறு குறுத்தவண்ணம் அல்லாடிக் கொண்டிருக்கையில், துப்பாக்கி வெடித்ததுபோல் ஒரு சத்தம். படீர் என்று வெடிக்கும் மற்றொரு சத்தம்.

என்னவென்று எல்லோரும் அச்சத்துடன் பார்க்கின்றனர். கைத் துப்பாக்கியுடன் ஓர் இளைஞன் பார்