பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
52
 


ஆகவே, உணர்ச்சி வசப்படாத நிலையில் நாம் எப்பொழுதும் இருக்கவேண்டும் என்ற உண்மையை நாம் உணர்ந்து வாழவேண்டும். ஏனெனில், நமது வாழ்க்கையானது எப்பொழுதும் நாம் எதிர்பாராத நிகழ்ச்சிகளையே நமக்கு அளிக்கிறது, அதனைத் தாங்கிக் கொள்ளக்கூடிய உடல் சக்தியையும், மனஆற்றலையும் தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு தாங்கிக்கொள்ள முடியாது போனால், தவறு இழைக்கத்தான் நேரிடும். தண்டனை பெறத்தான் நேரிடும் இதற்கு பாஸ்டியா சம்பவம் ஒரு பாடமாக அமைகிறது அல்லவா! மனதையும் உடலையும் பக்குவப்படுத்தவும், பண்படுத்தவும்தான் விளையாட்டுக்கள் உதவுகின்றன. விளையாட்டு உலகிலே இப்படிநடந்து கொண்டால், வாழ்க்கையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் பகலிலே பாதை தெரியவில்லை என்றால் இரவில் எப்படி முடியும்! இதுதான் பாஸ்டியா நமக்கு விளக்குகின்ற பாடமாகும்.