பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
54
 

போட்டியாளர்கள் போட்டி நேரத்தில் தவறு இழைத்தால், அந்த நடுவர்கள் தவறிழைப்பவரின் கழுத்து பாகத்தில், அந்தத் தடியின் கூர்முனையால் குத்திவிடுவார்கள். வலிதாங்காத வீரன் உடனே விலகிக்கொள்வான். கழுத்தில் மட்டுமல்ல, தவறைச்சுட்டிக்காட்டி, தவறுக்குள்ளானவரை விடுவிக்க எது சாதகமான இடம் என்று அறிந்து, தவறிழைப்பவரின் உடலில் குத்துவார்களாம். பிறகு எப்படி தவறு மீண்டும் முளைத்தெழும்?

விளையாட்டை நடத்துபவர்கள் நடுநிலையாளர்களாக விளங்கி, நடுவர்களும் சிறந்த நீதிபதிகளாக பணியாற்றி விட்டால், விளையாட்டுத் துறை எப்பொழுதும் மக்களை சீர்திருத்தும், செம்மைப்படுத்தும், வாழ்வாங்கு வாழவைக்கும்.