பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

5649 ஆட்டங்களில் தோற்றான். அந்த 27 வயது வீரன் ஆடிய நேரம் எவ்வளவு தெரியுமா? 25 மணிநேரம். இவ்வளவு நேரம் இத்தனைப் பேர்களுடனும் நினைவாற்றலுடன் ஆடி விளையாடியது ஓர் உலக சாதனையாகி விட்டது.

ஆமாம்! 560 பேர்களுடன் 25 மணி நேரம் ஆடி 5 வினாடிக்கு ஒருமுறை ஒரு மேஜைக்குச் சென்று ஆடியபோது நடந்த தூரம் 30 கிலோ மீட்டர் என்றும் கணக்கிட்டிருக்கின்றார்கள். இதுவும் புதிய சாதனைதானே!

இதற்கும் முன்னர் ஒரு உலகசாதனை இருந்தது. அவர் செக்கோஸ்லோவோகியா நாட்டு வீரர் விளாஸ் டிமில்ஹொர்ட் ஆவர். 550 பேர்களை எதிர்த்து ஆடினார். அந்தசாதனையைத்தான் வெர்னர் ஹக் முறியடித்தான். இந்தஇளம்வயதில் இப்படி ஒரு சாதனையைப்பொறித்த வெர்னரைப் பாராட்டுவோம். நாமும் முயலலாம். முயன்றால்,அதுவும் எண்மையாக முயன்றால் முடியாதது உண்டோ!