பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



59

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



ஆனால், இணைப்பான்கள் நடுக்கம்பு விழுந்த பிறகும் கீழேவிழாமல் இருந்ததே அது எப்படி?

அதுதான் அனைவருக்கும் மர்மமாக இருந்தது. என் இணைப்பான்கள் கீழே விழவில்லை? ஏதாவது மந்திரமா என்று எல்லோரும் எண்ணியபொழுது, மர்மம் வெளிப்பட்டது. அத்தனை மர்மத்திற்கும் காரணம் வெயில்தான் என்பது வெளியானதும், ஆச்சரியத்தில் எல்லோரும் அயர்ந்தே போனார்கள்.

மூன்று குறிக்கம்புகளையும் இணைக்கின்ற இரண்டு இணைப்பான்களும் வெயிலின் காரணமாக, ஒட்டிக் கொண்டன. அதாவது, இணைப்பான்களின் மேல் ஒட்டியிருந்த வார்னிஷ் வெயிலில் உருகி, இணைப்பான்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

அதனால்தான் இணைப்பான்கள் கீழேவிழவில்லை. அடித்தாடிய பந்தடி ஆட்டக்காரர் (Batsmall) ஆட்டம் இழக்கவில்லை. அதிர்ஷ்டக்கார ஆட்டக்காரர்தான் அவர்!

வார்னிஷ் வாழ்க்கையில் மட்டும் விளையாட வில்லை, கிரிக்கெட் ஆட்டத்திலும் விளையாடி இருக்கிறது பார்த்தீர்களா? -

குறிப்பு: குறிக்கம்புகள் வீழ்ந்தாலும், விழாவிட்டாலும் இணைப்பான்கள் கீழே விழுந்தால், அந்த விக்கெட்டைக் காத்து ஆடக்கூடிய ஆட்டக்காரர் ஆட்டமிழப்பர் என்பதுதான் விதி.

ஒருசமயம் விக்கெட்டில் பந்து வந்து மோத எகிறிமேலே போன இணைப்பான் ஒன்று மீண்டும்வந்து அதே இடத்தில் அமர்ந்துகொள்ள, அந்த ஆட்டக்காரர் ஆட்டம் இழக்கவில்லை என்ற ஓர் நிகழ்ச்சியையும் இங்கே உங்களது நினைவுக்குக் கொண்டு வருகிறோம்.