பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்
64
 


அவரது மகன்கள், என்று மக்கள் நினைத்தது போல் நடக்கவில்லை.

பிரெடரிக் லூயியின்மகன் மூன்றாம் ஜார்ஜ், தந்தையின் மரணத்திற்காக வருந்தினானே தவிர, ஆட்டத்தைக் குறைகூற வில்லை, அவனும் ஆதரவு காட்டினான். தானும் விளையாடி மகிழ்ந்தான்.

கிரிக்கெட் வரலாற்றிலே இது ஒரு சோக நிகழ்ச்சிதான் என்றாலும், எதிர்பாராத இழப்பாகப் போய்விட்டதே தவிர, இதனால் எதிர்பார்த்த இன்னல்கள் கிரிக்கெட்டை சாராமல், பிழைக்க வைத்துவிட்டது.

மன்னன் மனிதனாக வந்து விளையாடினான். என்றாலும், ராஜகம்பீரமாக இறப்பினைத் தழுவினான். அவனது புதல்வர்களும் தந்தையைப் போலவே, ராஜகம்பீரமான பாதையில் பெருமிதத்துடன் நடந்து தந்தையின் பெயரையும் புகழையும் காத்தனர்.

உடலால் மறைந்தாலும், புகழால் கிரிக்கெட் உலகில் உலாவரும் மன்னன் பிரெடிரிக் விளையாட்டுப் பற்றை நாமும் வாழ்த்துவோமாக!