பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.77
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 


பாப் டிஸ்டால் என்ற அயர்லாந்துவீரன் ஒருவன் வென்றான். அமெரிக்கன் மோர்கன் மூன்றாவது இடத்தையும், இங்கிலாந்து வீரன் லார்டு பர்கிலி நான்காவது இடத்தையும் அடைந்தனர்.-

முதலாவது வந்த பாப்டிஸ்டாலும் அணிவகுப்பில் கலந்துகொண்ட வீரன்தான். என்றாலும் ஓய்வு எடுத்திருந்தால் நிச்சயம் லார்டு வென்றிருக்கலாம். ஆனாலும், லார்டு தன் எதிரியை மனிதனாக நினைத்தான். மற்றவன் களைத்திருக்கும் நேரம் பார்த்து வெற்றிபெற்று விடலாம் என்ற குயுக்தியை வெறுத்தான்.

சமவாய்ப்பு இருக்கவேண்டும் என்று ஏற்றுக்கொண்டான். தோற்றாலும் வீரனாகத் தோற்றான். வீர மனிதனாக மாபெரும் புகழுடன், வரலாற்றுலகில் வாழ்ந்து வருகிறான்.

பண்புடையோர் வென்றாலும் தோற்றாலும் புகழப் படுகின்றனர் என்பதற்கு லார்டுவே சாட்சி.