பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

8O


ஏழு வாரங்கள் அனலில் கிடப்பது போல் வாழ்ந்தாலும், மன அமைதியையும்,உடல் ஆற்றலையும், விளையாடும் திறமைகளையும் இழக்காத வீராங்கனை யாக வாழ்ந்திட, இவான் சுலகாங்குக்கு எப்படி அந்த இதயம் வந்தது?

எல்லாம் விளையாட்டு வழங்கிய வீரமும் விவேகமும்தான். எதிர்பாராத சூழ்நிலைகளை, சிக்கல்களை விளைவித்து. விடுவித்துக் கொள்ள வழிகாட்டும் விளையாட்டில் பெற்ற பண்பட்ட மனம்தான், அவளை நிம்மதியாக வாழவைத்தது. வீராங்கனையாகத் திகழவிட்டது.

புற்றுநோயின் பயத்தையும் புறம்போக்கிய வீராங்கனை, நமக்கெல்லாம் அற்புதமான கலங்கரை விளக்கமாக அல்லவா நின்று வழிகாட்டுகிறாள்! நாமும் அந்த திடமான இதயத்தைப் பெறுவோம். தேர்ந்ததிறமைகளையும் வளர்ப்போம். சிறப்பாக வாழ முயல்வோம். அதுதானே மனிதப்பிறவியின் மகிமை!