பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்

84


ஆனால், பில்ஸ்வீட்மென் எதுவும் பேசவில்லை. கிழக்கு ஜெர்மானிய வீரர்கள் வீராங்கனைகள் எவ்வாறு இந்தத் திறமைகள் பெறுகின்றார்கள் என்பதை அறியும் ஆவலுடையவரானார். பயிற்சி முறையும், விஞ்ஞான ரீதியில் பழகித் தரும் முறையும் எல்லா நாட்டினருக்கும் ஒன்றுபோல்தான் அமையும் என்றாலும், இவர்கள் பயிற்சி முறை எப்படி அமைந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்தார்.

அதனால் பில்ஸ் வீட்மென், மாஸ்கோவிலே தான் தங்கியிருந்த நேரங்களில், அதிகநேரத்தை கிழக்குஜெர்மானிய வீராங்கனைகள் பங்குபெறும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும், வீராங்கனைகளுடன் பேசுவதிலுமே நிறைய செலவழித்தார். அவருடைய நோக்கம் எல்லாம் அவர்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்பதை அறிவதுதான்.

அவரது முயற்சி தோற்கவில்லை, எதை அறிய வேண்டும் என்று விரும்பினாரோ, அதை, மிகவும் நுணுக்கமான ரகசிய பயிற்சிமுறையை, அறிந்து கொண்டார். அவர்களைப் பயிற்றுவிக்கும் அந்நாட்டினரின் அருந்திறமையையும் பாராட்டி மகிழ்ந்தார்

அதாவது கிழக்கு ஜெர்மானிய விஞ்ஞானிகள், நீச்சல் போட்டிக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகளில்தான், மற்ற நாட்டினரிலிருந்தும், மாறுபடுகின்றனர். சிறுமிகளில், பெண்களுக்குரிய ஹார்மோன் (Harmone) சமநிலையை விஞ்ஞான அடிப்படையில் ஆராய்ச்சி மூலமாகக் கண்டுணர்ந்து, அவர்களில் சிறப்பானவர்களையே தேர்ந்தெடுத்துப் பயிற்சியளிக்கின்றனர்.

அவர்கள் தருகின்ற விஞ்ஞானபூர்வமான சிறப்புப்பயிற்சிக்கு சிறுமிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையில் அவர்கள் திறமை காட்டுவதால்தான். ஒலிம்பிக் பந்தயங்களில் பெரும் வெற்றியடைகின்றனர் என்பதை ஸ்வீட்மென் கண்டுகொண்டார்.

வெற்றியின் ரகசியம் புரிந்தது! நடைமுறைப்படுத்தவேண்டுமே!