பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85 டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லயா

x

34. பரிசு படுத்தும் பாடு

1980ம் ஆண்டில் கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரத்தில் முதன் முதலாக புதிய ஒலிம்பிக் பந்தயம் நடைபெற்றது. அதில் கடைசி நிகழ்ச்சியான மாரதான் ஓட்டப் போட்டியில் மட்டுமே கிரேக்க நாடு வெற்றி பெற்றது. கிரேக்க ஒட்டக்காரர் ஸ்பிரிடன் லூயிஸ் வெற்றி பெற்று, தன் தாயகத்தின் மானத்தைக் காத்ததாக ஒரு வரலாறு.

கிரேக்க வீரன் வெற்றி பெற்றதும் அவனது ஆயுள் முழுவதும் இலவசமாக முடி அலங்காரம் செய்து தருவேன், ஆடை தைத்துத் தருவேன், உணவு வழங்குவேன் என்று ஒவ்வொருவராக முன்வந்து பரிசுதர முன்வந்தார்கள். கிரேக்கமே அவ்வீரனுக்கு வாழ்த்தி பரிசுகளை அளித்தது. அவற்றில் பிரச்சினைகள் ஏதுமில்லை.

இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று தாயகம் வந்தபோது, அவர்கள் ஆயுள்காலம் வரை குளிர்பானம் வழங்குவோம் என்று வாக்களித்தது ஒரு நிறுவனம். அதில் ஏதும் பிரச்சினை முளைத்தெழவில்லை.

கிரிக்கெட்வீரர் கபில்தேவுக்கு மோட்டார் சைக்கிள் பரிசினை சென்னையில் டெஸ்ட் மேட்ச் நடந்தபோது பரிசளித்தார்கள். அதிலும் பிரச்சினை வரவில்லை.

சண்டிகார் நகரில், சண்டிகார் விளையாட்டுத்துறை எழுத்தாளர்கள் சங்கத்தில், பரிசளிப்பு ஒன்றை நடத்தியபோது, அதன் தொடர்பாக எழுந்த பிரச்சினைதான், பரிசு பெற்றவர்களை பாடாய்படுத்தி விட்டது . கீதா சட்ஷி (Geeta Zutshi) என்பவர், இந்தியாவில் சிறந்த வீராங்கனை ஆவார். சிறந்த ஓட்டக்காரி என்பதால் அவரை தேர்ந்தெடுத்து, பரிசளிப்பு விழாவும் நடந்தது. சிறந்த