பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100

கொடிய விலங்கினங்கள், கூடவே வாழ்ந்த வீரிய முள்ள உயிரினங்கள் அவர்களை உணவாக்கிக் கொள்ள முயன்றபொழுதெல்லாம், தப்பிப் பிழைக்கும் தயார் கிலைக்கு அவர்கள் ஆளாகி இருந்தார்கள். அவ்வாறு திடீரென ஒடி, உயரே தாவி, மரங்களில் ஏறி மறைந்து வாழ்ந்த சக்தியும் திறமையும் இரத்தத்திலே பரம்பரை பரம்பரையாக ஊறிச் செழித்தோங்கி இருந்தன.

அவர்கள் வாழ்ந்த கடின உழைப்பும், கொண் டிருந்த திறமையும் இயற்கை தந்த வரப்பிரசாதமாகும். காட்டிலே வாழ்ந்த வாழ்க்கையை நாட்டிற்கு வந்து உழைத்த அவர்களது உழைப்பு, உள்ளத்தைக் குலைத் திருந்தாலும், உடலில் செழித்திருக்கவே செய்தன. நவீன நாகரீக உலக வாழ்வு அவர்களுக்கு மிக அண்மைக் காலத்தில் தானே கைக்கெட்டும் வகையில் அமைந்திருக்கிறது.

இவ்வாறு வாழ்க்கை முறை அவர்களை வன்முறை யில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது, உடலமைப் பின் தன்மையும் அந்த ஓட்டத்திற்கு ஏற்றவாறு, உறு துணையாகும் வண்ணம்தான் அமையப் பெற்றிருக் கின்றது! என்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிந்து கூறினர்.

உடல் அமைப்பு நீக்ரோக்களின் இடுப்பெலும்புடன் இணையப்பெற்ற தொடை எலும்பானது, சற்று முன்புறமாக வந்து முன் னிருப்பது போல அமைந்துள்ளது. அதன் காரணமாக, தொடையும் சற்று முன் தள்ளி சரிந்து வந்திருப்பது போல அது தோற்றம் கொண்டிருக்கிறது.