பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
101

ஒரு நீக்ரோ ஒவ்வொரு முறை ஒடுவதற்காக வைக் கின்ற ஒவ்வொரு காலடியிலும், மற்ற மனிதர்களைவிட 5 அங்குல தூரம் அதிகமாக வைப்பதற்கு, அந்தத் தொடையின் அமைப்பு இடம் தருகிறது. அத்துடன் அவர்களது குதிகால் அமைப்பும் உடலின் சக்தியைத் தாங்கி விரைந்து பணியாற்றவும், அந்தப் பணியுடன் இயைந்து இணைந்து செயல்பட இடுப்பில் பொருந்தி இருக்கும் பந்துக் கிண்ண மூட்டின் அமைப்பும் சற்று முன் பக்கமாகவே சரிந்து அமைந்திருக்கிறது.

இந்த அமைப்பின் வேற்றுமை, ஒரு வெள்ளையனும், ஒரு நீக்ரோவும் இயல்பாக உட்கார்ந்திருக்கும் பொழுது கன்ருகப் புலகுைம் என்பார்கள். இதன் பலன் என்ன வென்ருல், ஒரு நீக்ரோவால் குறுகிய துரத்தை விரை வாக ஒடிக்கடக்க முடியும். ஆனால்கெடுந்துாரம் ஒட இயலாது என்பதுதான் அந்த இடுப்புத் தொடையின் அமைப்பின் முக்கியக் கருத்தாக அமைகிறது.

இத்தகைய குதிகால அமைப்பும், இடுப்பெலும்புத் தொடையின் இணைப்பும், முன் சரிந்தத் தொடையின் துார ஒட்டத்திற்குத் துணை வராத காரணம், காலடி களின் இடைப்பட்டிருக்கும் அடி வைக்கும் தூரம் அதிக மாகும் பொழுது, களைப்பினை உண்டாக்குவதுடன் மற்ற இன மக்கள் காலடிகளை மாற்றி மாற்றி வைத்து ஒடும்பொழுதே ஓய்வு எடுத்துக் கொள்கின்ற தன்மை யான உடலமைப்பு, நீக்ரோக்களுக்கு அமையவில்லை என்பதே உண்மையாகும் என்றும் கூறுவார்கள்.

வெள்ளையர்களும், மற்ற இன மக்களும் நெடுங் துாரம் ஒட முடிவதற்குரிய காரணம், நீண்ட இடைவெளி இருப்பது போல் காலடிகளை வைப்பதற்கேற்றவாறு