பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105 காரணங்கள் உடலால் மனிதனைப் பாதிக்கவில்லை. அவன் வழியை மறிக்கவில்லை. வாழ்க்கைத் தொடரு கிறது வழக்கத்திற்கு மாருக,

தேகத்தில் தோன்றும் வெளி மாற்றங்களை அலட் சியம் செய்கிருன். அதே நேரத்தில் உடலில் உள்ளே தோன்றும் உள் மாற்றங்களை உணர்வதில்லை. தேகத் தினை அவன் தரமாகக் காத்துக் கொள்ளத் தவறும் பொழுதுதான், அந்த உள் மாற்றங்கள் விரிகின்றன. நிறைகின்றன.

செல்களால் ஆன நமது தேகத்தில், செல்கள் தங்கள் சக்தியை இழக்கத் தொடங்குகின்றன. அடிப் படை ஆடத் தொடங்கினுல் கட்டிடத்தின் கதி என்ன? அதுபோலவே, அவன் தேகத்தின் வீரியம் குன்று கின்றது.

மாற்றத்தின் வளர்ச்சி அதையும் மீறி செயல்படுவதால் சக்தியிழப்பு அதிகமாகிறது. ஆனால் சக்தியை நிறைவுபடுத்தும் வேலை மிகவும் நிதானமாகவே உடலில் நடைபெறுகிறது. இதன் காரணமாக, திசுக்கள் தேவையானசக்தி இன்றி தளர்ந்துவிடத் தொடங்குகின்றன.

செல்லால் ஆன திசுக்கள் சோர்ந்து விடும்பொழுது அவற்ருல் உருவான உறுப்புக்களும் மெதுவாக கொஞ்சங் கொஞ்சமாகப் பாதிக்கப்படுகின்றன. தோல் வளம் காக்கின்ற சுரப்பிகளின் சுரக்கும் தன்மைக்கும் சுரத்துக் குறைவதால், தோல் மெல்லியதாகவும், காயும் தன்மையுற்று வறட்சியடைந்தும் போகின்றது.