பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
10


சூழ்நிலையில் வாழ வேண்டுமானல், மேற்கூறிய பழமொழிகளை அன்ருட வாழ்க்கையில் அவசியம் அனுசரித்துக் கடைப்பிடித்தால்தான், இந்த ஜென்மம் கடைத்தேறும்என்று அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆன்மகெறி காட்டும் அன்பர்கள் அனைவரும் கூறிச் சென்றனர். கூறிக்கொண்டும் இருக்கின்றனர்.

சொல்லைச் செயலாக்குவது எப்பொழுது? செயலில் தெளிவு பெறுவது எ ப் போ து? அதற்கென்று மனதையும் உடலையும் பண்படுத்தும் வேலையைத்தான் அற்புத விளையாட்டுத் துறை அரும்பாடுபட்டு செய்து வருகின்றது. பண்பட்ட உடலும் மனமும் வேண்டும், என்றுதான் விளையாட்டுக்கலை கொடி காட்டி நம்மை அழைக்கின்றது.

களை போக்கும் கலை

`மனமெனும் வயலை அனுபவ ஏரால் உழுது, நல்ல அனுபவத்தால் பெற்ற அறிவு என்னும் நீரைப் பாய்ச்சி, சிந்தனை என்னும் பரம்படித்து, கல்நோக்கமென்ற பயிரை கட்டு, சுயகலம் என்னும் களையை நீக்கி, `கட்டுப்பாடு' என்னும் வேலி போட்டு, காலமெல்லாம் கடமையுடன் காத்து கின்ருல்தான்`சுகம்' என்னும் கதிர் விளையும். சுவை இன்பப் பயன் நிறையும்.

அந்த மனவயலைப் பண்படுத்தும் பணியில் விளையாட்டுத் துறை எவ்வாறெல்லாம் ஈடுபட்டு வருகிறது என்பதை நாம் அறியும் போது, ஏற்படு கின்ற ஓர் இனிய கனிந்த சூழ்நிலையை இத்தனை காள் இழந்திருக்கிருேமே என்ற ஏக்க நிலைதான் நம்மைப் பரவி கிற்கிறது.