பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109 என்னதான் காரணம் கூறினாலும், மனிதர்கள் முதுமைக்கு இரையாகிக் கொண்டுதான் இருக்கிருர்கள். இதனை ஒரு அறிஞர் கூறுகின்ருர்; முதுமையானவை எல்லாம் காலப்போக்கில் உதிர்ந்து போக, இளமை யானது மட்டுமே உலகில் வாழ்கிறது. ஆகவேதான் உலகம் என்றும் இளமையாகவே இயங்குகிறது. ' முதுமைக்கு இரையானவர்கள் எல்லாம், பலவீனத். தாலும், அறியாமையாலுமே என்று கூறி, அவர்கள் இயற்கையுடன் கொஞ்சம் இதமாக வாழப் பழகிக் கொண்டிருந்தால், இன்னும் தங்கள் வாழ்நாளைப் பெருக்கி இனிமையாக வாழ்ந்து மகிழ்ந்திருக்கலாம்.' என்று அறிவுரையும் கூறுகின்றார்கள்.

முதுமை காலத்தில் உடல் கலிவு அதிகமில்லாமல், பொலிவோடும் வலிவோடும் ஒரு சிலா வாழ்கின்ருர்கள் என்ருல், அவர்கள் இளமையில் ஒழுங்குற, பண்புற, வாழ்ந்திருக்கின்றனர் என்பதே பொருளாகும்

இளமைக் காலத்தை வறிதே வீணுக்காமல், வறிதே. வருத்தாமல், நன்னுேக்குடன் நயமுற வாழ்ந்திருக் கின்றனர் என்பதே அதன் உண்மை.

இன்றே வாழ்வோம். நாளை பற்றி நமக்கென்ன? என்ற முரட்டுக் கொள்கை; இனமையை வேதனைப் படுத்துவதுடன், முதுமையை விரைவில் கொண்டு வந்து விடுகிறது. ஒரு சிலர் வயதால்தான் முதுமை, யாகத் தோன்றுகிருர்கள். ஆனால் தங்களது பழக்க வழக்கத்தால், முதியவர்களாக தோற்றத்தால் மாறிவிடு பவரே அதிகம் உண்டு.