பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113 ஒருவர் வாழ்கின்ற ஆண்டுகள் நூறு என்று கொண்டோமானால் தூக்கத்தில் தொலைத்து விடுகின்ற ஆண்டுகள் ஐம்பது என்றும், பால பருவத்திலே பதினைந்து ஆண்டுகளும், முதுமை கோலத்திலே பதினைந்து ஆண்டுகளும், போய் விடுகின்றன என்று கூறி, இளமை காலமும், நடுத்தர வயதுடைய காலமும் எத்தனை ஆண்டுகள் வருகின்றன என்று கணக்கிட்டுக் கூறி, அந்தப் பூரண பொலிவும் நூதன இனிமை வலிவும் உள்ள காலத்தினை எத்தகைய 6Xசூழ்நிலையில் கழிக்க வேண்டும் என்றும் அறிஞர்கள் கூறிச் சென்றிருக்கின்றனர்.

இளமை எதுவரை இருக்கும்? இளமை எதுவரையில் நடுத்தர வயது எத்தனை வயதில் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம். இனிக்கும் இருபது என்று சொல்கிறார்கள். அதனைத் தொடர்ந்து கல்வி முடிகிறது. காலம் கழிகிறது. பதவி வருகிறது. கல்யாணம் முடிகிறது. குடும்பம் வளர் கிறது. குதுாகலம் நிறைகிறது.

நினைவுகளில் இ ள மை தொடரலாம். ஆனால் உண்மை நிலை என்ன? உடல் தளர்கிறது காலத்தால். நாம் செய்யும் காரியத்தால். இருபுறமும் எரிகின்ற மெழுகுவர்த்தி போல, உடலால் ஒருபுறம் தேய, உருகும் உள்ளத்தால் மறுபுறம் மாய, உடல் தளர்கிறது.

எப்பொழுது நடுத்தர வயது தொடங்குகிறது என்றால், அது காட்டுக்கு நாடு வேறுபட்டாலும், முப்பதி லிருந்து நம்மவர் தொடங்கி விடுவார்கள். நம் நாட்டு மக்களின் சராசரி வயதே, நாற்பது நாற்பத்தி ஐந்து வி. விரு-8