பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 என்று கணக்கிடும்பொழுது, நடுத்தர வயது என்ன என்று காம் எப்படி திட்டமிட்டுக் கூற முடியும்? முப்பதில் தொடங்கி நாற்பத்தி ஐந்து என்று கொள்ளலாமா?

உட்கார்ந்து உழைக்கின்ற நடுத்தர வாசிகள், உட் கார்ந்தே வாழ்கின்ற உல்லாசிகள்தான், நடுத்தர வயதில் நெருக்கப்படுகின்றனர் காலத்தால். இளமை வயதிற்குள்ளேயே தமது உடலில் முதுமையைப் புகுத்திக் கொண்டும் முனகிக்கொண்டும் வாழ்கின்றவர்கள் நம் மிடையே நிறையப் பேர் உண்டு.

இருபது வயதிலும் எரிச்சல்

இ ரு ப து இருபத்தைந்து வயதிற்குள்ளேயே எல்லாம் முடிந்து விட்டது, இனி என்ன இருக்கிறது என்று எரிச்சலுடன் வாழ்க்கை கடத்துவோர்; நான் இருந்து என்ன பயன்? என்று முடிவெடுக்கக்கூடிய முட்டாள் தனத்திற்கு முதுமையை அவர்கள் வர வழைத்துக் கொள்ளும் வகையிலேயும் பலர் வாழ்ந்து வருகின்றனர்.

இயற்கையுடன் நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இயற்கையின் சக்தியிலே நம் தேக சக்தி யைப் பெருக்கிக் கொள்ளலாமே தவிர, இயற்கையை எதிர்த்து என்றும் நம்மால் வாழவே முடியாது.

நடுத்தர வயதில்தான் நாலும் உணர்ந்து தெரிந்து வைத்திருக்கின்ற காலம். கல்வி அறிவா, கலவி உணர்வா, உலக நினைவா என்பன போன்ற புதிய அனுபவங்களை எல்லாம் பெற்றுக் கொண்டிருக்கும்