பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118 பிரச்சினைகளை விரட்டுங்கள்

தொடக்கத்தில் கடினமாகவே இருந்தாலும், துரத்தி வரும் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஆனந்த விடுதியாக விளையாட்டு மைதானம் இருக் கிறது. நாளாக நாளாக விளையாட்டுக்களில் பிடிப் பேற்பட்டு, அதனுல் உடலியக்கம் அதிகமாக, நலியாமல் செல்கள் உயிர்க் காற்றை அதிகம் உண்ண, அதனல் திசுக்கள் வளமாக உருவாகி, தசைத் திரள்களை மாற்றி, கொழுப்பினை அகற்றி,ஒரு குதூகலமான மனப்பாங்கை யும் கொடுத்துவிடுகிறது. விரட்டும் பிரச்சினையை விரட்டி அடிக்கவும், இந்த மன எழுச்சி உதவுகின்றது. உவப்பினைப் பெறும் உணர்வினையும் காக்கின்றது.

நடுத்தர வயதில் விளையாட்டைத் தொடங்க வேண்டும் என்று விரும்புவோர், கால் பந்தாட்டம், வளை கோல் பந்தாட்டம் என்று முதலில் அங்கு போய் விடாமல், பூப்பந்தாட்டம், மேசைப் பந்தாட்டம், வளையப் பந்தாட்டம் என்று தொடங்கவும்.

குணியவும், நிமிரவும், மெதுவாக பந்துடன் ஓடவும், கின்று பேசி மகிழவும், கிரிக்கெட் பயன்படும். நீச்சல் பயிற்சி மேலும் நல்லது. படகு தள்ளிப் பயணம் செய். தல், வேகமாக காலை மாலை வேளைகளில் நடத்தல் போன்றவை உடல் உறுப்புக்களை நன்ருக இயக்கப் பயன்படும்.

ஆகவே, நடுத்தர வயதில் நலமாக வாழ வேண்டும் என்று விரும்புவோர், விளையாட்டுத் துறை பக்கம் தங்கள் கண்னேட்டத்தையும் கருத்தோட்டத்தையும் திருப்ப வேண்டும். இது ஒரு கரும்புத் தோட்டமாகும்.