பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
11


`இளமையிலே கல்’ என்கிருேம். 'தண்டிலோ வளையாதது தடியிலே வளையுமா? என்கிருேம். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் இருக்கும் என்கிருேம். ஏன்? பசுமரத்தானிபோல பிள்ளைகள் மனதிலே, எந்த விஷயமும் பதிகிறது என்பதால்தானே! அதனால்தான் பாரதியும் பாடினர்` ஓடி விளையாடு பாப்பா' நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா' என்று.

பிஞ்சு நெஞ்சம்

ஒடி விளையாடும் பொழுது உள்ளமும் உடலும் நல்ல இரத்த ஓட்டத்தால் கிளர்ந்தெழுந்து, வளர்ந்து, செழித்து, பொலிவும் வலிவும் பெற்று விடும் என்பதனை உணர்ந்த பாரதி, ஒருமுறை செழித்து விடும் வாய்ப்பு பெற்ற உடலையும் உள்ளத்தையும் எந்த நிலையிலும் சோம்பலுக்கு ஆட்படுத்திவிடாதே என்று உணர்த்த: ஒய்ந்திருக்கலாகாது’ என்று எச்சரிப்பது போல், பாடினர்.

சோம்பல் நீங்கிய உடலும் உள்ளமும் தனிமையிலே இருந்தால் கல்லதல்ல. சோம்பேறியின் மூளை சைத்தானின் தொழிற்சாலை என்பதால் கூடி வாழ்க் தால்கோடி நன்மை என்பதற்கு ஏற்ப பாடுகிருர். ،وابهة விளையாட வேண்டும்’ என்றும் கோடிட்டுக் காட்டுகிருர், கூடி விளையாடு பாப்பா' என்று அறிவுரை கூறிய பிறகு, அங்கே கடைசியாகக் காணும் நிலையும் காம் ஆராய வேண்டிய ஒன்றகும்.

நீரோடு நீர் கலக்கும் பொழுது அலை உண்டாகிறது. மேகத்துடன் மேகம் மோதும் போது இடி, மின்னல் உண்டாகிறது. ஆகவே மனிதருடன் மனிதர் சேரும். போது உணர்ச்சியும், கிளர்ச்சியும் உண்டாகும்.