பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 122 நான்குகால் பாய்ச்சல் நிலையிலிருந்து,ந்டக்கப் பழகு கின்ற காலத்திற்குள், ஒரு குழந்தை விளையாடிக் களிப்பதை பெற்ருேர்களே நன்கு உணர முடியும். அதனை 'குறுகுறு நடந்து சிறு கை நீட்டி' என்று புற நானுாற்றுப் புலவர் ஒருவர் மிக அழகாகப் பாடி யிருக்கின்ருர். குழந்தைகளை 'மயக்குறு மக்கள்' என்று கூறி இருப்பது எத்துணைப் பொருத்தம்.

குறுகுறுவென கடந்து சிறு கை நீட்டி, இட்டும் தொட்டும் என்று குழந்தை சாப்பிடுகின்றக் குறும்பினைக் கூறிய அவர், பிள்ளை தரும் இன்பம் பேரின்பம் என்று கூறி நம்மை வியக்க வைக்கின்ருர். அத்தகைய குறும்பும், கரும்பான ஓட்டமும், விளையாட்டும் குழந்தை களுக்குக் கட்டான உடலையும், கனிவான மன வளர்ச்சி யையும் அல்லவா கிறைய வாரி வழங்குகின்றது.

கடமையோ கடமை ஈன்று புறக் தருவது அன்னைக்கும், சான்ருேளுக்கு தல் தந்தைக்கும், வேல் வடித்துத் தருதல் கொல்லர்க்கும் வீரனுக்குதல் வேந்தர்க்கும் கடமை என்பதும் புற நானுற்றுப் புலவரின் பொன்வாக்குதான், என்ருலும் குழந்தைக்கு வீரத்தையும், விவேகத்தையும், திறமை யையும், கடமையையும் ஊட்டி வளர்க்கும் பொறுப்பை இன்று அரசுதான் மேற்கொள்ள வேண்டும்.

குருகுலக் கல்வி நம் நாட்டிலே இருந்தபொழுது, சாதாரண குடும்பத்துக் குழந்தைகளும். பெருங்குடி மக்களின் குழந்தைகளும் ஒரே குருவின் கீழ் ஒன்றுகூடி பல்லாண்டுகள் பாடங் கேட்டதையும், வில் வித்தை, யானை ஏற்றம், குதிரை யேற்றம், போர் முறைப் பயிற்சி