பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123 போன்ற பல்திறன் வாய்ந்த பயிற்சிகளைப் பெற்றனர். என்பதையும் புராணங்களும், காவியங்களும் மிகவும் வியந்து கூறும்.

கிரேக்க வரலாற்றினைப் படிக்கும்போது, ஏழு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் அனைவரும் பெற்ருே ரைப் பிரிந்து, அரசு மேற்கொண்டு காக்கின்ற பொதுப் பயிற்சிக்கூடத்திற்குக் கொண்டு வரப்படுகின்றனர். அவர்களின் உடற்பயிற்சி, உடல் நல வளர்ச்சி மற்றும் தேசப் பணி எல்லாம் முடிய முப்பத்திமூன்து வயது வரை ஆகின்றது, அதற்குப் பிறகே அவர்கள் இனிய குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்வு கடத்த முற்பட்டனர் என்பதனையும் நம்மால் அறிய முடி கின்றது.

பொற்காலம் பெற்ற நாட்டின் சரித்திரத்தை சரித் திர காலத்தை ஆராய்ந்தால், மக்கள் எல்லாம் வளமாக வாழ்ந்தார்கள் என்பதையே நம்மால் கான முடிகிறது. ஒரு நாட்டிற்கு அழகு எது என்று கேட்டு மணியாகக் கூற வந்த வள்ளுவப்பெருமான், கோயில்லா வாழ்வான பிணியின்மையே நாட்டிற்கு அணியென்ருர் அதனே ஆழமாக ஏன் சொல்ல வேண்டும்? நோயில்லா மக்களால்தான் கம்பிக்கையுடன் உழைக்க முடியும். செல்வம் சேர்க்க முடியும். விளைச்சலைப் பெருக்கமுடியும். இன்பத்தை நுகர முடியும். அதனைத்தான் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று நாசூக்காகக் கூறி னர் கமது முன்னேர்கள்.

பிணியற்ற வாழ்வுக்கு மணியான முறையான வாழ்க்கைமுறை அமையவேண்டும். அத்தகைய முறை