பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125 பிடித்து நல்ல வழி காட்டுவதற்கு அரசாங்கம் மேற் கொண்டு, அதற்கேற்ற நிபுணர்களே, உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்களைப் பயன்படுத்திக் கொண் டால் எதிர்பார்த்த-எதிர்பார்க்கின்ற இனிய சமுதாயம் இயல்பாகவே அமைந்து விடுமே!

ஓடி விளையாடுவது மட்டுமல்ல குழந்தைகளின் இயல்பு. கூடி விளையாடுவதும், குலவி மகிழ்வதும் தான். நீரோடு நீர் சேர்வதுபோல, காற்ருேடு காற்று கலப்பது போல, குழந்தைகள் ஒன்று கலந்தாலும் போதும், உள்ளத்தில் ஊறுகின்ற உணர்வுகள் பதப் படுகின்றன. பண்படுகின்றன. பயன்பெறுகின்றன.

அவவாறு பண்படுத்துவதும், பதப்படுத்துவதும் தான் ஆசிரியர்கள் ஆற்றுகின்ற பணியாகும். பெற். ருேர்கள் மேற்கொள்கின்ற கடமையுமாகும்.

சூடான இரும்பில் அடி! 'சூடாக இருக்கும்போதே இரும்பை அடித்து நீட்டு' என்பது ஆங்கிலப் பழமொழி. விளையாடிக் கொண் டிருக்கும் பொழுதே பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை வேண்டியவாறு மாற்றி விடலாம், அங்கே மாற்று. வதற்குப் பொறுப்பேற்று இருப்பவர்களும் நல்லவர் களாக இருக்க வேண்டும் என்பதும் உணர்ந்து தெளி வதற்குரிய ஒன்று.

ஒடியும், கூடியும் விளையாடுகின்ற பிள்ளைகளிடம் உடல் திறமும் மனத்திறமும் வலுப்பெறுவதுடன், உடற் சக்தியையும் மனச் சக்தியையும் வெளிப்படுத்தி,