பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 விகாரமில்லாத சாந்தி தரும் துணையாகவும் விளையாட்டு விளங்குகிறது. ஆகவே பிள்ளைகளை விளையாட் டில் ஈடுபடுத்தும்போது, மிகவும் பொறுப்புடன் கவனித்து, விழிப்புடன் வழி நடத்திச் செல்லவேண்டும். இல்லையேல் குளிக்கப் போய்ச் சேற்றை பூசிக்கொள்ளும் கதைதான்!

பிள்ளைகள் கற்றுக் கொள்ளும் பழக்கங்கள் விதிகளுக்கடங்கிய விளையாட்டு, பொறுப்புகளுக் கேற்ற கடமை, தவறுகளுக்கேற்ற தண்டனை, வெற்றிக் கேற்ப மகிழ்ச்சி, தோல்வியை ஏற்கும் மனவலிமை, பிறர் தவறினை மன்னிக்கும் மனப்பக்குவம், அடுத்தவர் திறமையைப் பாராட்டும் அரிய பண்பு, தான் என்று தருக்கித் திரியும் கர்வம் வராத நிலைமை, பெரியோர்களை, உரியவர்களை மதித்து வணங்கும் உயர்ந்த நெஞ்சம் எல்லாம் முறையாக விளையாட்டினால் நிறைவாக வரக் கூடிய பண்புகளாகும்.

பிள்ளைகளை வழி நடத்துவோர். நல்ல முறையில் செய்தால் நிச்சயம் விளையாட்டுத் துறையில் வெற்றி பெறலாம். ஏனென்றால் விளையாட்டும், வாழ்க்கையும் கால மகளின் களங்கமில்லா முகத்திற்கு இரு கண்கள் போன்றவை. கண்களைக் காப்பதுபோல வாழ்க்கையை மட்டும் காத்தால் புண்ணியமில்லை, விளையாட்டையும் காக்க வேண்டும்!

பச்சை மண்ணில் பக்குவமாகச் சிலை வடிப்பது போல், பல்வளம் கிறைந்த மண்ணில் பயிர் வளர்த்து பெருகிய விளைவைப் பெறுவதுபோல, பிள்ளைச்