பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
15

பழக்கமே வேண்டும். தவறாக ஆடுகின்றவர்கள் கடுவரால் உடனே தண்டிக்கப்படுவதுடன், பார்வை யாளர்களாலும் கேவலமாகப் பழிக்கப் படுகின்ற கிலைக்கும் ஆளாகி விடுவதால், முடிந்தவரை எல்லோரும் கல்லதைச் செய்யவே, முயன்று முடிந்தவரை ஆடுகின் றார்கள். மகிழ்கின்றார்கள்.

ஆகவே, வாழ்வுக்கு வேண்டிய நோக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், நோக்கத்திற்கேற்ற நுணுக்கம் கிறைந்த திறமையை வளர்த்துக் கொள்ள வும், நுணுக்கத்திற்கேற்ற திறமையை வளர்க்கப் பிறருடன் பழகி வாழும் இணக்கத்தைப் பெருக்கிக் கொள்ளவும், இணக்கம் பழக்கமாகி, எத்தகைய நிலையிலும் கலங்காத நெஞ்சமும், களங்காணும் வீரமும், வெற்றி காணும் செயலை விளைக்கவும் அதனையே வாழ்க்கையின் விளக்கமாக்கி, கலங்கரை விளக்கமாகக் காட்சியளிப்பதுதான் விளையாட்டாகும்.

கலங்கரை விளக்கின் ஒளி கண்டு, கடமையுடன் பயணம் செய்பவர் பத்திரமாகக் கரை சேர்கிருர். புலனடக்கம் இல்லாமல் போகின்றவர் பாறையிலே மோதிக்கொண்டு பரிதாபத்துக்குரிய அழிவு கிலைக்குத் தம்மை ஆட்படுத்திக் கொள்கின்ருர். வாழ்க்கையும், விளையாட்டும் எப்படி யெல்லாம் இணைந்து செயல்பட்டு, மனித குலத்தை மேம்படுத்துகின்றன!

வாழ்க்கை வழி களைத்து ஓடுவோரைக் கூட்டி வைத்து,வளமான வாழ்வுக்கு கலமான உடல்தேவை, கலமான உளம் தேவை, நல்லுழைப்புத் தேவை எனக்கூறி வாழ வழி காட்டுகிறது விளையாட்டுத் துறை.

வலிவான உடலும் வளமான மனமும் பெ ДDs விளையாடி மகிழ்வோம். சுக வாழ்வு பெறுவோம்!