பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2. வாழ்வு தரும் விளையாட்டு


ஆசையும் வாழ்வும் பாரதத்தின் மேல் பதினேழுமுறை படையெடுத்து, பக்தர்களின் மனங்களைப் பதறடித்து, பவித்ரமான ஆலயங்களை இடித்து, பணம் நகைகளைக் கொள்ளை யடித்துப் போன கஜனி முகமதுவின் கடைசி நாளில் கடந்த நிகழ்ச்சியை சரிததிர ஆசிரியர்கள் இப்படி எழுதிக் காட்டுகிறார்கள்.

மரணப் படுக்கையில் கிடக்கும் மன்னன் எதிரே, பொன்னும் மணிகளும் மலைமலையாகக் குவிந்திருக்க, கண்ணிர் வழிந்தோட கஜினி முகமது கூறினுைம்: "இறைவா! இத்தனை சொத்துக்களையும் என்னுடன் எடுத்துக் கொண்டு போக அனுமதிக்க மாட்டாயா! இவ்வளவையும் விட்டு விட்டா என்னை இறக்கச் சொல் கிருய்” என்று கதறினுைம்.

கூட வருவது பாவ புண்ணியம் ஒன்றே! காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே, என்பதுதான் நம் எல்லோருக்கும் தெரியுமே! பின் ஏன் கொள்ளை