பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 17

 யடித்த அந்த மன்னன் அவவாறு குமுறிக் குமுறி அழுதான்? அதுதான் ஆசை.

எல்லோருக்கும், தாம் இன்பமாக வாழ வேண்டும், நிறைய பொன்னும் பொருளும் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை, பேராசை, ஏக்கம் கிறைந்த வீணுசை எப்பொழுதுமே உண்டு. மன்னனும் ஒரு மனிதன் தானே! அதனுல்தான் அழுதான்.

அழக்கூடிய மனித குலத்திற்கு ஆறுதல் கூறு வதற்காக வள்ளுவர் ஒரு வழியைக் கூறினுர். வாழ் வுக்குத் தேவை பொன்னும் பொருளுமா? அல்லவே அல்ல. வாழ்வுக்குத் தேவை 'புகழ்' என்றுர், "தோன்றின் புகழொடு தோன்றுக"என்றுர், "அஃதிலார் தோன்றலின் தோன்ரறுமை நன்று,” என்று ஆணித்தரமாகக் கூறினுர்.

புகழ் தரும் மகிழ்ச்சி

நீங்கள் புகழுடன் வாழாவிட்டாலும் பரவாயில்லை. நிதமும் மகிழ்ச்சியாகவாவது வாழ்ந்து செல்லுங்களேன், என்று பல படிகள் கீழே இறங்கி வந்து பெரியவர்கள், அறிஞர்கள் போதித்தார்கள்.

"இறக்கப்போகும் உயிர்தானே! இதற்கென்ன இத்தனை காவல், ஆவல், ஏவல் என்று மதர்த்துப் போன மனிதர்கள் பேசுகின்ற பேச்சுக்களையும் நாம் அவ்வப்பொழுது கேட்கத்தான் கேட்கிறோம்.

'நெருகல் உளன் ஒருவன் இன்றில்லை' என்று பெருமை படைத்த உலகில் நாம் வாழ்கிருேம். இன்று வி. விரு-2