பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



22


திண்ணென்ற வலிமையுடன் வளர்கிறது, வாழ்கிறது. நலத்தையும், சுகத்தையும் பொழிகிறது.

ஏழை உட்கொளளும் உணவானது எல்லாமே ஜீரணமாகப் பெறுவதுடன், மனத் திருப்தியினலேயே பூரண சத்தினைப் பெருக்கித் தருவதால்தான் ஏழை. களைப்பில்லாமல் உழைக்கிருன். வாழ்கிருன்.

ஆகவே வாழ்வானது உழைப்பால் பெருமை பெறு கிறது. திறமையடைகிறது. இந்த அற்புதமான வாழ் வைப் பெரும்பான்மையான மக்கள் சுமையென்றே எண்ணி, ஏதோ தெரியாமல் காம் பிறந்து விட்டோம்.” என்ற திகைப்புடனேதான் வாழ முயல்கின்றனர்.

வாழ்க்கையை சுமை என்பதை மறந்துவிட்டு, விளை யாட்டு என்று எண்ணிக்கொண்டால் பளுகுறையும் பயன் தெரியும். பலன் கிறையும். விளையாட்டு என்ற தும், விளையாட்டுத் தனமாக, அதாவது சிறுபிள்ளைத் தனமாகத்தான் என்று நீங்கள் எண்ணி விடாதீர்கள்.

விளையாட்டு என்ருல் அதற்கு நோக்கம் உண்டு. அந்தக் குறிக்கோளை அடைய கால அளவும் உண்டு. நீதி நியாய வழிகளும் உண்டு. வழுவில்ை தண்டனை யும் உண்டு. எதிர்பார்க்கும் இலட்சியத்தை அடைய இணைந்து செயல்படும் காணயமும், கா நயமும்,நல்ல பாச உணர்வும் விளையாட்டிலே உண்டு.

வருகின்ற வெற்றித் தோல்விகளை இயல்பாக ஏற்றுக்கொள்கின்ற மனழுைச்சி எல்லாம் விளையாட்டிலே உண்டு.