பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



23


உழைப்பும், களிப்பும் : மேலே கூறிய கருத்துக்களனைத்தும் வாழ்வுக்கு சாலவும் பொருந்தும். ஆகவே விளையாடும்பொழுது பெற்றுக்கொள்ளும் மேலே காணும் அரிய பண்புகளை வாழ்வுடன் சேர்த்துக் கொண்டால் வாழ்க்கை விளை யாட்டாகவும இருக்கும். களிப்பாட்டமாகவும் இருக்கும்.

ஏழை சில நேரத்தைத்தவிர, எல்லா கேரங்களிலும இன்பமாகவே வாழ்கிருன் என்று முன்னர் கூறி னுேம். ஆகவே எல்லோரையும் ஏழை ஆகிவிடுங்கள். வெய்யிலிலே உழையுங்கள் என்று வற்புறுத்துவதாக யாரும் எண்ணிவிட வேண்டாம்.

உழைப்பவர்கள் உழைக்கட்டும். உழைக்க மறுப்ப வர்கள் உடலை இயக்க ஆடுகளத்திலே இறங்கட்டும். விளையாடட்டும். மேனி வெயிலில் குளிக்கட்டும், வியர்வை வெள்ளமாக வழிபட்டும். வெளியேறட்டும். மனம் கவலைகளை மறக்கட்டும். இன்ப வாழ்வின் கதவுகள் திறக்கட்டும்.

செல்வம் உள்ளவர்கள். நடுத்தரக் குடும்பத்தினர் அனைவரும் உடலால் ஏழைபோல் உழைத்து வாழ்ந்து, உள்ளத்தால் செல்வர்போல் செழித்து வாழ்ந்தால், வாழ்வு விளையாட்டாக அல்ல. விளையாட்டே வாழ் வாக மாறி, வழி காட்டும். கலம் கூட்டும்.

திணையளவு வரும் இன்பத்தைப் பனையளவாகக் கொண்டு மகிழ்வார் பயன் தெரிவார்.

அதுபோல, பனையளவு பயன் நல்கும் விளையாட்டினை பயன் தெரிந்த பண்பாளராகப் போற்றி இணையில்லா இன்பத்தையும் சுகத்தையும் பெறுவோம் வாரீர் !