பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



26


என்று கேட்பவர்களுக்கு சரித்திர நிகழ்ச்சி ஒன்றைச் சுட்டிக் காட்டுவோம்.

'ஆழிசூழ் உலகை எல்லாம் என் ஆளுகையின் கீழ் கொண்டு வருவேன், எதிர்த்தோரை அடக்குவேன். ஏக சக்ராதிபதியாக முடிசூடி வாழ்வேன்’ என சூளுரைத்துத் தோளுயர்த்தி, உலகப் பெரும் போரைத் துவக்கிய நெப்போலியனை, யாருமே வெல்ல முடியாது என்று எல்லோரும் வெருண்டு நின்ற வேளையிலே, கப்பற்படையுடன் மோதி, கனவு கண்டவனே கதி கலங்கடித்து, மாபெரும் வெற்றி பெற்று, மன்பதையை காத்தான் ஒரு மாவீரன். ஆங்கில காட்டைச் சேர்ந்த ஆற்றல்மிகு கப்பல் படைத் தலைவன் நெல்சன் என்பது அத்தலைவன் பெயர்.

பெற்ற வெற்றியின் பெருமையைப் பற்றிப் பேசும் பொழுது, பிரபு கெல்சன் கூறியதாவது: 'எனது ஆற்ற லுக்கும் வீரத்திற்கும் விவேகமான போர் நுணுக்கங்களுக் கெல்லாம் அடிப்படையாக அமைந்தவை, நான் விளையாட்டு மைதானத்தில் பெற்ற அனுபவங்கள்தான்.'

இளமையிலே விளையாட்டு வீரராக விளங்கிய நெல்சன், வீறுகொண்ட தலைவராகவும, வீரர்களை கடத்திச் செல்லும் திறம பெற்றவராகவும், பிற்காலத் தில், பிரபலமானதற்குக் காரணம், அவர் பெற்ற அனு பவமே காரணம் என்ருல் இதைவிட அருமையான ஆதாரம் வேறென்ன வேண்டும்?

மேனுட்டு விளையாட்டுத்துறை பேரறிஞர் ஒருவர். உலகத்தாருக்கு சவால் விடுவதுபோல உரைத்த ஒரு வசனத்தைப் படியுங்கள். அற்புதமாகக் குழந்தைகளை வளர்க்கவேண்டும் என்று விரும்புகின்ற பெற்றேர்களே,