பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

-- 27. 50 குழந்தைகளை என்னிடம் கொண்டுவந்து தாருங்கள். விளையாட்டு மைதானத்தில் வைத்து அவர்களைப் பழக்கிப் பயிற்சி தந்து சிறந்த குடிமக்களாக ஆக்கிக் காட்டுகிறேன்.”

உண்மையை உரக்கக் கூறினுல்தான், ஒத்துக் கொள்ள முடியும் என்ற மனுேகிலையை இன்று உலக மக்கள் பெற்று இருக்கின்ருர்கள். வேறு வழி இல்லாததால்தான் விளையாட்டைப் பற்றி விவரமாக இப்படி எழுத வேண்டியிருக்கிறது.

உணராத உளறல்கள் வேண்டாத ஒரு பொருளைப் பார்ப்பது போல விளையாட்டை ஒரக்கண்ணுல் காக்கைப் பார்வை பார்ப்பவர்களும், கருடப் பார்வை பார்ப்பவர்களும் உண்டு. . விளையாடுவது சிறுபிள்ளைத்தனம் என்று பெரிய மனிதர் பாணியிலே பேசுவோர் உண்டு. விளையாடலாம்! பிறகு, நாம் என்ன குழந்தைகளா? எனக் கிழட்டு, மொழி பேசுவோரும் உண்டு.

"நமக்கெல்லாம் எங்கே விளையாட நேரம் இருக் கிறது?’" என்று நாட்டையே காக்கிற பெரிய பொறுப் பாளிபோல பேசிவிட்டு, ஒரு மூலையிலே போய் உறங்கு கின்ற சோம்பேறிகளும் உண்டு.

திமிர் பிடித்தவர்கள் விளையாடுகின்ருர்கள், தினவு கொண்டவர்களும், வாழத்தெரியாத வக்கற்றவர்களும், தான் விளையாடப் போகின்ருர்கள் என்று வரட்டு வேதாந்தம் பேசுவோரும் உண்டு.