பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

28 பேசிப் பேசியே காலம் கழிக்கும் பேதையர்களும், பேசாமல் ஒதுங்கிப்போகும் மேதையர்களும், விளை யாட்டை வெறுத்து ஒதுக்குவதால், வளரும் சமுதாயம் எப்படி வளமின்றிப்போக காரணமாய் அமைந்து விட்டார்கள் என்ற அவல நிலையும் அழியும் நாள் எந்நாளோ?

போற்றத் தகுந்த குணங்களை, பண்பட்ட மனதில் வீற்றிருக்கச் செய்கின்ற வேள்வியினை ஆற்றும் விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்தவர்கள் எல்லாம் உண்மையிலேயே பாக்கியவான்கள்தான்.

பாக்கியவான்கள் உலவும் இடம்

'பரம ஏழையா நீ? பின்னல் போ! பணக்காரன? முன்னால் வா! என்று யாரும் ஆணையிடாத இடம்தான் விளையாட்டுத் திடல்.

தனிப்பட்டவர் தனது திறமையின் மூலம் இனிய புகழை, நனிசான்ற நல்ல பெருமையை அடைய முடியும் என்ருல், அதுவும் இங்கேதான். கவலை வண்டுகள் வந்து கடுமையாகக் கொட்டாமல், பாதுகாப்பையும் பொறுப்பையும் தருகின்ற இடமும் இதுவேதான். அங்கே வருவோரும் விளையாட்டில் ஒன்றிக் கலந்து விடுகின்றனர். எவ்வாறு என்று கேட்கத் தோன்று கிறதல்லவா !

அழகும் ஆண்மையும் மிக்க இளைஞன் ஒருவனும், எழிலும் இளமையும் நிறைந்த ஒருத்தியும், பொழில் ஒன்றில் சந்தித்த பொழுது, உள்ளம் கலந்த நிலையை பைந்தமிழ்ப் புலவர் ஒருவர் பாடுகின்ருர்.' செம்புலப் பெயல் நீர்போல, அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே.'