பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

39 செம்மண் நிலத்திலே பெய்த மழையானது, அந்த செக்கிறத்தையே பெற்றதோர் சீரிய நிலபோலவே, விளையாட்டுக் களத்திலே விழுந்த நெஞ்ச மழையானது அதனுடனேயே ஐக்யமாகியல்லவா விடுகிறது!

இவ்வாறு ஒன்று கலந்து கின்று நிலவி, உள்ளத் திலும் உருவத்திலும், ஒப்பற்ற பண்புகளையும் உயர்ந்த செயல்களையும் உருவாக்கும் ஆடுகளம், இனி செயல் படும் நிலையினை விளக்குவோம்.

கூடி விளையாடத்தான் அங்கு கூட்டம் கூடு கிறது. அந்தக் கூட்டத்தின் காட்டமெல்லாம் ஓடி. விளையாடுவதுடன், ஒன்று சேரும் மனப்பாங்குடன் உறவாடும் மனப் போக்குடனே இருக்க வேண்டும் என்றே நிலவுகிறது.

தேவை. தனக்கென்ருலும், தன் குழு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக விட்டுக் கொடுக்கும் மனப் பான்மையுடன் விளையாடி வெற்றிபெற வேண்டும் என்பதால், விளையாட்டாக, வேடிக்கையாக மேற்கொள் கின்ற முயற்சிகள் எல்லாம், வாழ்வுக்குத் தேவையான அனுபவங்களாக, அடிப்படைக் குணங்களாக, ஆதார மான உணர்வுகளாக அல்லவா அமைந்துவிடுகின்றன! விளையாட்டில் விளையாடும் பண்புகள்

வெற்றி என்ற முன்னெற்றம் நிறைந்த உன்னத லட்சியம். அந்த லட்சிய நோக்கத்தினையே வட்டமிடும் நினைவுகள். அந்த நினைவுகளை உந்தி வழி நடத்து கின்ற முயற்சி. முயற்சியில் எப்பொழுதும் சலிப்பு ஏற்படாத உற்சகம். உற்சாகத்தை நெறிப்படுத்தும் விளயாட்டின் நெறிமுறைகள். அந்த நெறிமுறைகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்குவம்.