பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. விளையாட்டுத் தத்துவம்


அறிவு தரும் அனுபவம்

வயலிலே விளைந்த தானியத்தைக் கதிர் என்கிறோம். விளையாமற் போனதை பதர் என்கிறோம். கிளையிலே விளைந்த காயை கனி என்கிருேம். விளையாமற் போனதை வெம்பல் எனகிருேம். தரத்திலே விளைந்த மரத்தை வைரம் என்கிறோம். விளையாமற் உளுத்துப் போனதை பட்டமரம் என்கிறோம்.

விளைந்துபோன பொருட்களே உலகில் விலைபோகின்றன. தலையாயத் தன்மையில் மதிக்கப்படுகின்றன என்பதை வாழ்க்கை அனுபவம் நமக்கு நன்றாக எடுத்துக் காட்டுகிறது.

பிறகு ஒவ்வொரு மனிதனுக்கும் படிப்பாலும், அனுபவத்தாலும் அறிவு பெருகிக்கொண்டேபோகிறது அந்த அனுபவத்தை அறிந்து, உணர்ந்து அதனை ஏற்று அறிவுடன் செயல்படுகின்ற மனிதனே அறிஞனாகிறான், கலைஞனாகிறான், தலைவனாகிறான், அனுபவத்தை அலட்சியப்படுத்துகின்ற அத்தனை பேரும் வாழ்க்கை

வி.விரு_3