பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34

நிலையிலும் வேண்டாத இடத்திற்குத் தள்ளப்படுகின்றார்கள்.

மனித இனத்திற்கு அனுபவங்களை அள்ளித் தருகின்ற ஒர் உயர்தர துணை ஒன்று உலகில் இருக்கிறதென்றால், அதுதான் விளையாட்டாகும்.

குதிகால் தரையில் முதலில் பட இயங்குவதை நடை என்கிறோம். முன் பாதம் மட்டும் முதலில் தரையில் பட இயங்குவதை ஒட்டம் என்கிறோம். அதுபோலவே உடல் உறுப்புக்கள் அனைத்தும் துரிதகதியில், சீரான முறையில் இயங்குவதை ஆட்டம் என்கிறோம்.

'ஆட்டு’ என்றால்' இயக்கு என்றும், 'அம்' என்றால் 'அழகு' என்றும், ஆட்டம் என்ற சொல் பிரிந்து பொருள் தரும். உடல் உறுப்புக்களாகிய கைகள், கால்கள், விரல்கள், விழிகள், முகத்தசைகள் அனைத்தும் அழகுற, நயமுற இயங்குவதைத்தான் ஆட்டம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

ஆட்டமும் பேயாட்டமும்

சீராக, சிறப்பாக இயக்கும் இயக்கத்தை விளைந்த ஆட்டம் என்றும், தடுமாறி தரம் மாறித் துள்ளுவதை, இயக்குவதை பேயாட்டம் என்பதாகக் கூறுவதை நாமறிவோம். ஆனால் விளையாட்டு என்னும்பொழுது விளக்கமும் அதி அற்புதமாகவே அமைந்திருக்கிறது.

சீரான இயக்கமாகிய ஆட்டம் நல்ல முறையில் விளைந்திருப்பதைத்தான் விளையாட்டு என்று நமது முன்னேர்கள் கூறிச் சென்றனர்.

இத்தகைய விளையாட்டு எவ்வாறு தோற்றம் எடுத்தது என்று ஆராயப் புகுந்த அனைவரும், மனித