பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42

இறக்கும் பொழுதுகூட உரிமையுடன் தேர்ந்தெடுத்தே இறக்கும் வாய்ப்பு இருக்கிறது! எப்படி வாய்ப்பு?

வீரர்கள் எத்தனை பேர் மாறினாலும் வரவேற்று, மனைவியாக வாழும் உரிமை பெற்றவள் அக்காட்டு மகாராணியே. சாகும்வரை வெற்றி வீரர்களுக்கு மனைவியாக வாழ்கின்ற சாசுவதத் தன்மையிலே அரசி தனது வாழ்க்கையை அனுபவிக்கின்றாள். இந்திரன் எத்தனைபேர் வந்தாலும், இந்திராணி ஒருவரே என்று நமது காட்டுப் புராணங்கள் கூறுகின்றனவே அதுபோல்தான்.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை ஏன் ஒலிம்பிக் பந்தயம் கடத்தப்பெற்றது கிரேக்க நாட்டிலே என்ற கேள்விக்கு விடைதான் இந்தக் கதை. உண்மையோ, பொய்யோ, கிரேக்க நாட்டுக் கதைகளில் மேலே கூறிய கதையும் ஒன்று.

வயதும் வலிமையும்

நான்கு ஆண்டுகளுககுள்ளேயே ஒருவரது ஆண்மையும் ஆற்றலும், அதனால் விளையும் திறமையும் அருமையும் குறைந்து குறுகிப் போய்விடும், என்று கிரேக்கர்கள் நம்பி நடத்திய ஒலிம்பிக் பந்தயங்களின் தொடர்ச்சியாக, இன்று நடைபெறும் புதிய ஒலிம்பிக் பந்தயங்கள், கிரேக்கர்களின் கருத்தும் கம்பிக்கையும் பொய் என்றே பறைசாற்றி நிற்கின்றன.

ஆல் ஒர்ட்டர் என்ற அமெரிக்கர், நான்கு ஒலிம்பிக் பந்தயங்களில் (அதாவது 16 ஆண்டுகள்) தொடர்ந்தாற் போல் தட்டெறியும் போட்டியில் புதிய