பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

 சாதனையினை ஏற்படுத்தி வெற்றிபெற்று ஒரு வீர வரலாற்றையே உண்டு பண்ணியிருக்கிருர்,

26 மைல்களுக்கு மேல் ஒடி முடிக்கின்ற மாரதான் என்ற கெட்டோட்டப் போட்டியில் எதியோப்பியா நாட்டைச் சேர்ந்த அபீப் என்பவர், முதல் ஒலிம்பிக் போட்டியில் வெறுங்காலால் காலணியின்றி ஒடி வெற்றிபெற்று, அடுத்த நான்காண்டு கடந்த ஒலிம்பிக் போட்டியில், திருமணமான பிறகும் கூட, புதிய சாதனையை ஏற்படுத்தித் தங்கப்பதக்கம் பெற்ருர். இரண்டு முறை இவர் ஒருவரே மாரதான் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிருர்.

இவர்கள் காட்டுகின்ற சாதனைகள் போல், எத்தனையோ பட்டியல் உண்டு. உடலைக் கட்டாகவும் செட்டாகவும், பொன்னைப்போல் போற்றி பூ போலக் காத்து வந்தால், உடலும் அழகுற இருக்கும். ஆண்மையுடன் ஜொலிக்கும் என்ற கருத்துக்கு ஆதாரமாக அண்மையில் நிகழ்ந்த ஒரு விளையாட்டு. நிகழ்ச்சியை விளக்குவோம்.

"ரிக்ஸ்” என்ற அமெரிக்கர் முன்னுள் விம்பிள்டன் டென்னிஸ் விளையாட்டு வெற்றி வீரராவார். 55 வயது.நிரம்பியவர் என்ருலும் விளையாடுவதற்கு வயது வரம்பு கட்டுவது தவறு என்பதை நிரூபிக்கும் வகையில் ஆண்கள் என்றும் ஆண்கள்தான் என்று. கொடி உயர்த்திக் காட்டுபவர்போல், விம்பிள்டன் பெண்கள் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையாகத் திகழ்ந்த மார்கரேட் கோர்ட் என்ற 29 வயது கிரம்பிய ஆஸ்திரேலியப் பெண்ணை, டென்னிஸ் போட்டியிலேயே. பந்தயங்கட்டி வெற்றி பெற்றார்.