பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44

'உட்கார்ந்து வேலை செய்யக்கூட லாயக்கு இல்லை என்று ஓய்வு கொடுத்து, வீட்டிற்கு வயோதிகராய் அனுப்பிவிடும் நம் நாட்டிற்கு வேலை செய்யும் விதி அமைத்திருக்கும் வயதிலே, விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் ரிக்ஸ்.

1973 ஆம் ஆண்டின் பெண்கள் விம்பிள்டன் டென்னிஸ் வீராங்கனையான "ஜீன்கிங்" என்னும் அமெரிக்கப் பெண்ணுடனும் ஆடினார். ஆனாலும் தோற்றார்.

ஆகவே விளையாடுவதற்கென்று ஒரு வயது வரம்பு இல்லை என்பதை நம் நாட்டவர் உணர வேண்டும். விளையாடி மகிழ வேண்டும்.

பயிற்சியும் பலமும்

புதிய தசைத் திசுக்களைப் பெருக்கிக் கொள்ளவும், சுவாச சக்தியினை மிகுதியாக்கிக் கொள்ளவும் தடைபடாக் குருதி ஓட்டத்தையும் கிளர் ஈரலையும் பெறுவதற்காக 100 வயது வரை பயிற்சி செய்யலாம் என்கிறார் ஓர் ஆராய்ச்சி நிபுணர்.

வயது ஆக ஆக முதுமை வருகிறது என்பது உண்மைதான். அதற்காக, முதுமை வந்தால் முடங்கித்தான் கிடக்க வேண்டும், அடங்கித்தான் வாழ வேண்டும் என்பதில்லையே!

வளமான வாழ்வுக்கும், விவேகம் நிறைந்த பயணத்திற்கும் திறமான உடல் அவசியம் என்பதை எல்லோரும் அறிவார்கள். வாழ்க்கையில் வயது மட்டும் ஏறவில்லை, குடும்பச் சுமையும், சுற்றுப்புறத் தொல்லைகளும், துயரங்களும் கூடத்தான் ஏறி