பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47 இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும்கூட, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறும் மேலைகாட்டு வீராங் கனைகள் வெற்றிபெற்றது பற்றி நாம் படிக்கும்பொழுது வேறு என்ன சொல்ல இருக்கிறது?

ரஷ்ய நாட்டிலே ஒவ்வொரு மே மாதமும் கடக்கின்ற ஏழரை மைல் ஒட்டப் பந்தயம், அதில் 35 வயதுக்குக் குறைந்தவர்கள் 3ல் வயதைக் கடந்த ஆண்கள் என்று பங்கு பெறுபவர்களைப் பிரித்துப் பந்தயம் விடுகிறர்கள், அந்தப் பந்தயத்தில் கலந்துகொள்ள வந்த ஆண்களில் ஒருவர் பெயர் என். சோலதோவ் என்பது. வயது அவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? 77

இந்தப் பந்தயத்தில் பங்கு பெற்று பரிசு வாங்கிப் பெருமிதம் அடைந்து பேரின்பம் பெற வேண்டும் என்பதற்காக அவர் கலந்து கொள்ளவில்லை. உடல் நலத் திற்காக, உடல் நலமாக இருப்பது கண்டு உற்சாகம் பெறுவதற்காகவே. அவரது ஆர்வத்தையும் உடல் நலத்தின் மேல்கொண்டுள்ள ஒப்பற்ற அக்கறையை யும் நாம் புரிந்து கொள்ளவே இந்த சான்றினை நான் கூறியிருக்கிறேன். குழந்தைகள்தான் விளையாட வேண்டும் என்கிற கட்டாயமும் சட்ட வரம்பும் இல்லை. உடலில் சக்தி இருக்கின்றவரை மைதானத்தில் இறங்கி எல்லோரும் ஆடலாம். ஒடலாம். விளையாடலாம்.

உணவுபோல்தான் விளையாட்டும் வயதாகி விட்டது என்று உணவு வகைகளையும், உண்ணும் அளவையும் குறைத்துக் கொள்ளுகிருர்களே அதுபோலவே, விளையாட்டுக்களையும் தேர்ந்தெடுத்து குறித்த நேரம் விளையாடுவதே சிறந்த வழியாகும்.